வெற்றிப்பெருமிதத்துடன் கடைசி இராணுவ வீரர் ஈராக்கிலிருந்து டிசம்பரில் வெளியேறுவாராம்.
ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வருகிற டிசம்பர் மாதம் வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கடந்த 9 ஆண்டுகளாக ஈராக்கில் நடந்த போர் முடிவுக்கு வந்து விட்டது. எனவே, அமெரிக்க படைகள் முழுவதும் ஈராக்கில் இருந்து டிசம்பரில் வாபஸ் பெறப்படும்.
ஈராக்கின் பாதுகாப்பு அதன் சொந்த இராணுவத்திடம் ஒப்படைக்கப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அவர்களே தீர்மானிப்பார்கள்.
வெற்றி பெருமிதத்துடன் அமெரிக்க ராணுவத்தின் கடைசி வீரர் இந்த ஆண்டு இறுதியில் தலை நிமிர்ந்து வெளியேறுவார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment