பாரத லக்ஷ்மனின் பூதவுடல் கொலன்னாவ இல்லத்தில்
முல்லேரியா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் பூதவுடல் கொலன்னாவையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அவரின் பூதவுடல் கொலன்னாவைக்கு கொண்டு வரப்பட்டபோது முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதேவேளை, முல்லேரியா பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் என். கே இளங்ககோன் குறிப்பிட்டுள்ளார். பொலி்ஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் முல்லேரியா பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்ககளம் தற்போது மேற்கொள்ளும் விகாரணைகள் நிறைவடைந்தவுடன் இக்கொலைச் சம்பவம்தொடர்பான சந்தேகநபர்கள் கைதுசெய்யப்படுவார்கள் எனவும் பொலிஸ் மா அதிபர் என். கே இலங்கோன் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment