ஜனாதிபதி ராஜபக்க்ஷ - இந்திய வெளியுறவுச் செயலர் சந்திப்பு
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மாத்தாய் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வடக்கு கிழக்கில் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்தது
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் வை இன்றுபகல் 12 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் தி.சிறீதரன் ஆகியோர் சந்தி த்து பேசியுள்ளனர். சுமார் 45நிமிட நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாயுடன் இந்திய அதிகாரிகளும் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா பிரதி உயர்ஸ்தானிகர் குமரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இதேநேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளரை நேற்று சந்தித்துள்ளதுடன் வழமைபோல் அறிக்கையும் விடுத்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைபின் புதிய பங்காளிகளான மேற்படி இரு தரப்பினரும் இந்திய தரப்பை வெவ்வேறாக சந்தி த்துவிட்டு வெவ்வேறாக விடுத்துள்ள அறிக்ககையில் இருதரப்பு ஒரே விடயங்களை பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய வெளியுறவுச் செயலாளர் திரு. ரஞ்சன் மத்தை க்கும் பாதுகாப்புச் செயலாளர் திரு. கோத்தபாய ராஜபக்ஷ விற்குமிடையேயான சந்திப்பொன்று இன்று காலை (ஒக்-10) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் இரு தரப்புறவு குறித்தும், விசேடமாக பாதுகாப்பு நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கைக்கான முதலாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இந் சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே கான்தாவும் கலந்துக் கொண்டிருந்தார்.
0 comments :
Post a Comment