வெளிநாடுகளில் தங்கியிருந்து ஓய்வூதியம் பெறுவோர் தொடர்பில் பதிவு செய்யப்பட்டு குறித்த ஓய்வூதியத்தினை மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஓய்வூதிய திணைக்களம் மேற்கொண்டு வருகிறது. ஓய்வூதியம் பெறுபவர்களில் 20 ஆயிரம் பேர் வெளிநாடுகளில் தங்கியுள்ளதாக ஓய்வூதிய திணைக்களத்தினால் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்து ஓய்வூதியம் பெறுவோர் குறித்து மீண்டும் பதிவுகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடம்களாக ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கைகள் அதி பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஓய்வூதிய திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதற்கமைய இரண்டு வருடம்களாக சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் எவ்வித முன்னறிவித்தலுமின்றி ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இதன் பிரகாரம் கடந்த 2010 ஆம் ஆண்டு மாத்திரம் வெளிநாடுகளில் வசிப்போருக்கு 150 கோடி ரூபா பணம் ஓய்வூதியமாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு செலுத்தப்பட்ட பணத்தொகைக்கு புதிய திட்டமொன்று அறிமுகம் செய்து அதற்கமைய வழங்கப்படவுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment