முஸ்லிம் காங்கிரஸிக்கு முதுகெலும்பில்லை என்று சொல்ல ஐ.தே.கட்சிக்கு அருகதையில்லை.
ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருக்கும் முரண்பாடுகள் பற்றி பேச வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என கூறியுள்ள மு.கா வின் தலைவர் ரவுப் ஹக்கிம் முஸ்லிம் காங்கிரஸிக்கு முதுகெலும்பு இல்லை எனக்கூற ஐக்கிய தேசியக் கட்சிக்கு அருகதை கிடையாது என தெரிவித்துள்ளார்.
கொழும்பு புதுக்கடையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் முஸ்லிம் காங்கிரசை விமர்சிக்காமல் தங்களது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள முடியாது என்ற நிலமைக்கு ஐக்கிய தேசிய கட்சி வந்திருக்கிறது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ரவுப் ஹக்கீம் அற்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது சிலர் எம்மீது குற்றம் சாட்டுவதை சாட்டவதைப்போல எவரையும் மாநகர ஆட்சியில் அமர்த்துவதற்காக மறைமுகமாக உதவுகின்ற அல்லது கொந்தராத்து வேலைபார்க்கின்ற கட்சியினர் அல்ல நாங்கள் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்ள விரும்பகின்றேன்.
எங்காவது ஒரு மூலை முடுக்கிலே சமுகத்தின் தன்மானம் அடகு வைக்கப்படும் போது அல்லது கேள்விக்குறியாக்கப்படும் போது வாளாவிருக்கின்ற தலைமைத்துவமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் இருக்கமுடியாது கொழும்பு மாநகர சபை தேர்தலைப் பொறுத்தவரையில் மூன்றாவது அரசியல் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கிறது.
கல்முனையில் முதலாவது அரசியல் சக்தியாக விளங்கும் எமது கட்சி அங்கு மாநகர சபையை மீண்டும் கைப்பற்றும் என்றார்.
0 comments :
Post a Comment