இலங்கை பொலிஸ்துறை சிங்கள ஆதிக்கம் மிக்க நிறுவனமாக உள்ளது- சுமந்திரன் எம்.பி
இலங்கைப் பொலிஸ் பிரிவு சிங்கள ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக உள்ளது என்பதையும் நாம் மறக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாரளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 84000 பேரைக் கொண்டதாக மதிப்பிட்டுள்ள அந்த பிரிவுக்குள் பணியாற்றும் தமிழ் பொலிஸார் ஆக 1143 மாத்திரமே எனவும் இந்த எண்ணிக்கையானது ஐ.நா. பொது மன்றத்திலே ஜனாதிபதி குறிப்பிட்ட பிரகாரம் அண்மைய காலத்திலே இடம்பெற்ற பணிக்கமர்த்தலிலே பணிக்கமர்த்தப்பட்ட 669 பொலிஸாரையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும் எனவும் சுட்டிக்காட்டியஅவர் இது மொத்த பொலிஸ் படைப்பிரிவின் 2 வீதத்திற்கும் குறைவான வீதமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பொலிஸ் மற்றும் முப்படைகளிலும் 1983 முன்னர் பல தமிழர்கள் இருந்தனர் என்பதும் அவர்கள் யாவரையும் பதவி விலகுமாறு புலிகள் நிர்பந்தித்திருந்ததையும் அவ்வாறு விலகாதவர்களையும் புலிகள் சுட்டுக்கொன்றிருந்தமையும் யாவரும் அறிந்ததே.
அத்துடன் பொலிஸ் இராணுவத்தில் தமிழர்கள் சேரக்கூடாது என புலிகள் தடைவிதித்திருந்தமையும் மீறிச் இணைவோர் துரோகிகள் என அறிவிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment