இலங்கைக்கு எதிராக தகவல் வழங்க இரண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கனடா செல்லவுள்ளனர் என திவய்ன செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் எதிர்வரும் 25ம் திகதி புறப்படவுள்ள இந்த இரண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் டொரன்டோ, ஸ்காப்ரோ ஆகிய பகுதிகளிலுள்ள புலம் பெயர் தமிழர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கனடாவில் புலிகளுக்கு எதிரான அமைப்பின் பேச்சாளர் எல்.மகாதேவன் தெரிவித்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில் புலிகள் மாவீரர் வாரத்தை வெகு விமர்சையாக கொண்டாட கடனாவிலுள்ள புலி ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் இவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதே நேரம் கனடாவின் பிசியமினா நிலையத்தில் நடைபெறவிருந்த இலங்கை சுற்றுலா மற்றும் வர்த்தக கண்காட்சி திடீரென ரத்து செய்யப்படடுள்ளது. இந்த இலங்கை கண்காட்சி ரத்து செய்யப்பட்டுளளதாக கனடா தமிழ் காங்கிரஸினால் புலி ஆதரவாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நேரம் மேலும் 3 தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளனர்.
No comments:
Post a Comment