நாட்டில் முறையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் - அதுரெலிய ரதன தேரர்
நாட்டில் முறையான சட்டங்கள் அமுல்படு;த்தப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரெலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார். நாட்டில் சரியான சட்டக் கட்டமைப்பு அமுல்படுத்தாத வரையில் நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய தேர்தல் முறைமையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக விருப்பு வாக்கு முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு ஏனைய அரசாங்கங்களுக்கு கிடைக்காத மாபெரும் அதிகாரம் காணப்படுவதாகவும் அதனை நல்லவிதமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முல்லேரிய சம்பவம் போன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தேர்தல் முறைமையின் கீழ் வாக்காளர்களுக்கு எவ்வித மரியாதையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதாகவும், மக்கள் சேவையாற்றுவதில் அவர்களுக்கு நாட்டமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment