வெளிநாடுகளில் உள்ளோரும் வாக்காளர்களாகப் பதியலாம்
வெளிநாடுகளில் வாழ்பவர்கள் இங்கு தம்மை வாக்காளர்களாகப் பதிய விரும்பினால் தமது உறவினர்கள் ஊடாக கிராம சேவையாளர்களிடமோ அல்லது தேர்தல் திணைக்களத்திடமோ விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுப் பதிவுகளை மேற்கொள்ளலாம் என்று யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆ.சு.கருணாநிதி தெரிவித்தார்.
தேர்தல் ஆணையாளர் விடுத்துள்ள சுற்றறிக்கையின்படி வெளிநாட்டில் உள்ளவர்களும் தம்மை வாக்காளர்களாகப் பதிய முடியும். குடும்பமாக வெளிநாட்டில் இருப்பவர்கள் தமது உறவினர்கள் ஊடாக இங்கே தம்மை வாக்காளர்களாகப் பதிவு செய்யலாம். இதற்கான விசேட விண்ணப்பப் படிவங்கள் கிராம சேவையாளரிடம் வழங்கப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பத்தில் வெளிநாட்டில் உள்ளவர்களது பெயர்களைப் பதிவு செய்து கொடுக்கும்போது கட்டாயமாக அவர்களது கடவுச் சீட்டு இலக்கத்தை குறிப்பிடுதல் வேண்டும். இதேபோன்று குடும்பத்தில் ஏதாவது ஓர் அங்கத்தவர் வெளிநாட்டில் இருப்பின் அவரையும் இங்கு வாக்காளராகப் பதிய முடியும். குறித்த விசேட விண்ணப்பப் படிவங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment