உணவகம் என்ற போர்வையில் விபசாரம், கருக்கலைப்பு நிலையம்!
பொலிசார் சுற்றிவளைப்பு 3 பெண்கள் உட்பட ஆறு பேர் கைது
உணவகம் என்ற போர்வையில் மிகவும் சூட்சுமமான முறையில் விபசாரம் மற்றும் கருக்கலைப்பு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையத்தினை சுற்றி வளைத்த மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மூன்று பெண்கள் உட்பட அறுவரை கைது செய்துள்ளதுடன் கருக்கலைப்புக்காக பயன்படுத்தப்பட்ட கருவியையும் மீட்டுள்ளனர்.
மாத்தறை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின்போதே குறித்த அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மாத்தளை வைத்தியசாலையின் சுகாதாரசேவை ஊழியரான பெண்ணொருவரும் அடங்குவதுடன் அவரே கருக்கலைப்புக் கடமைகளை முன்னின்று செய்துள்ளார் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மாத்தறை அக்குரஸ்ஸ பகுதியில் விபசார விடுதியொன்று இயங்கி வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் பொலிசார் மேற்கொண்ட சூட்சுமமான நடவடிக்கையினால் அங்கு விபசாரம் நடப்பதை பொலிசார் ஊர்ஜிதப்படுத்தியதுடன் குறித்த நிலையத்தை சோதனையிடுவதற்கான நீதிமன்றத்தின் அனுமதியினையும் பெற்றுள்ளனர்.
நேற்று முன்தினம் குறித்த நிலையம் சுற்றிவளைக்கப்பட்டது அதன்போதே அவ்விடத்தில் விபசாரம் மற்றும் கருக்கலைப்பு ஆகிய இரண்டும் இடம்பெறுவது தெரிய வந்தது, குறித்த நிலையத்தின் முகாமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளார், மாத்தறை வைத்திய சாலையின் சுகாதார சேவை ஊழியரான பெண்ணே கருக்கலைப்பு வைத்தியராக செயற்பட்டு வந்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சுற்றி வழைக்பப்ட்ட சந்தர்ப்பத்தில் சுமார் 26 வயது மதிக்கத்தக்க பதுளை மற்றும் தெனியாய பகுதிகளை சேர்ந்த இரு பெண்களும் கருக்கலைப்புக்காக அங்கு இருந்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சட்டவிரோத கருக்கலைப்பு நிலையத்திற்கு மாத்தறை ஆதார வைத்தியசாலையிலிருந்தே மருந்துகள் கிடைக்கப்பெற்றுள்ளது என விசாரணைகளின் மூலம் வெளியாகியுள்ளது.
0 comments :
Post a Comment