ஹிருனிகாவை அரசியலில் ஈடுபட விடமாட்டேன் -பாரத லக்ஷ்மனின் மனைவி சுமனா தெரிவிப்பு
தனது மகள் ஹிருனிகாவை அரசியலில் ஈடுபட விடமாட்டேன் என்று பாரத லக்ஷ்மனின் மனைவியும், ஹிருனிகாவின் தாயாருமான சுமனா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.த ஐலன்ட் ஆங்கில பத்திரிகைக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.அந்த பத்திரிகைக்கு சுமனா பிரேமச்சந்திர மேலும் தெரிவித்துள்ளதாவது,
அரசியல் காரணமாகவே எமது குடும்பத்திற்கு இந்தஅழிவு ஏற்பட்டது.நான் ஹிருனிகாவை அரசியலில் ஈடுபட விடமாட்டேன். அவரது தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளேன்.பிரச்சினைகளில் அகப்பட வேண்டாம் என்று நான் மகளிடம் தெரிவித்துள்ளேன் என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முல்லேரியாவில் கடந்த 8ம் திகதி தேர்தல் தினத்தன்று இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டு சண்டையில் கொல்லப்பட்ட முன்னாள் எம்பியும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பாராத லக்ஷ்மனின் பூதவுடலுக்கு மரியாதை செலுத்த வந்த பொதுமக்களிடம் தான் அரசியலில் ஈடுபடவுள்ளதாக பாராத லக்ஷ்மனின் மகள் ஹிருனிகா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment