நகர மக்களை மத்தியப்படுத்திய நிர்வாகம் ஒன்று கொழும்பு நகரிலும் ஏற்படுத்தப்பட வேண்டுமாம்.
நகர மக்களை மத்தியப்படுத்திய நிர்வாகம் ஒன்று கொழும்பு நகரிலும் ஏற்படுத்தப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொது மக்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்களை பாதுகாக்க மக்கள் வழங்கிய ஆணையை கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன, மத, பேதம் இன்றி அனைவரது உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் அனைவரும் செயற்பட வேண்டும்.என்று அங்கு உரையாற்றும போது எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர் ஏ,ஜே.எம்.முஸம்மில் அங்கு உரையாற்றுகையில் கொழும்பில் புதிய பயணம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும், அரசாங்கத்தின் உதவி அதற்கு அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்துடனோ, அரச நிறுவனங்களுடனோ மோத வேண்டிய அவசியம் தமக்கு இல்லை எனவும்,அவர் அங்குமேலும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் சவாலை வெற்றிகொண்டது போல் அனைத்து அபிவிருத்தி சவால்களையும் வெற்றிகொள்ளவுள்ளதாக அங்கு உரையாற்றிய கொழும்பு மாநகர சபை மேயர் ஏ,ஜே.எம்.முஸம்மில் நம்பிக்கை தெரிவித்தார்.
0 comments :
Post a Comment