நம்நாட்டிலும் கார் தயாரிப்பு (வீடியோ இணைப்பு )
இலங்கையில் ஏற்றுமதிப் பொருட்களான தேயிலை. இறப்பர், வாசனைத் திரவியங்கள் சிறந்து விளங்குவது போன்று தற்போது நமது நாட்டில் உற்பத்தியாகும் மைக்ரோகாரும் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது என்று மைக்ரோ கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் கலாநிதி லோரன்ஸ் பேரேரா தெரிவித்தார்.
மைக்ரோ கார் உற்பத்தி நிறுவனத்தின் குருநாகல் பிராந்தியக் கிளைக் காட்சி சாலை கண்டி வீதியில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு தலைமையுரை நிகழ்த்திய கலாநிதி லோரன்ஸ் பேரேரா அங்கு இவ்வாறு குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட குருநாகல் மாநகர முதல்வர் காமினி பெரமுனகே கார் காட்சி சாலையைத் திறந்து வைத்தார். அத்துடன் குருநாகல் மாவட்டச் செயலாளர் திருமதி குசும் ஹெட்டிகே உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்த கொண்டனர்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
மைக்ரோ கார் நிறுவனம் தம் சேவையை கொழும்புக்குள் மாத்திரம் மட்டுப் படுத்திக் கொள்ளாமல் நாட்டின் நாலா பாகங்களிலும் தம் காட்சி சாலைகளைத் திறந்துள்ளது. அந்த வகையில் கண்டி, மாத்தறை போன்ற இடங்களில் காட்சி சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. நுகர்வோரின் தேவையைக் கருத்திற் கொண்டு குருநாகல் நகரிலும் இந்தக் கட்சி சாலை திறக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேச மக்களுக்கும் சிறந்த சேவையை காலடியில் வழங்குவதற்காகும். இதன் உற்பத்தி நிலையம் கூட பொல்கஹவெலவில்தான் அமைந்துள்ளன. இந்தக் காருக்கு நம்நாட்டு மக்கள் மத்தியில் அதிக வரவேற்புக்கள் கிடைத்துள்ளன. மக்களுடைய தேவை கருதி சகல வசதிகளுடனான வாகனங்களை நாங்கள் உற்பத்தி செய்கிறோம். அதில் பென்டா கார். மைக்ரோ கார், உழவ இயந்திரம், சொகு வாகனங்கள் எனப் பல அடங்கும்.
வேளிநாட்டு 'வொல்வோ' கம்பனி மற்றும் அதிசிறந்த நிறுவனங்களின் தொழில் நுட்ப அறிவுடன் மக்கள் விரும்பக் கூடியவாறு உற்பத்தி செய்து சந்தைப் படுத்துவதில் முன்னணி வகிக்கின்றோம். அது மாத்திரமல்ல தற்போது வெளிநாடுகளுக்கும் ஏற்று மதி செய்கிறோம். நேபாளம் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இன்னும் எதிர் காலத்தில் பாக்கிஸ்தான். பங்களதேஷ;, தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கும் இந்த வாகன வகைகளை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment