இலங்கைக்கு எதிரான அழுத்தம் - ஐ.நா பிளவுபட அபாயம்.
இலங்கைக்கு எதிரான அழுத்தங்களினால் ஐக்கிய நாடுகள் அமைப்பு பிளவுபடக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக ரிவிர பத்திரிகையின் அரசியல் பத்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் இலங்கைக்கு எதிராக தேவையற்ற அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக கூடுதலாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் உறுப்பு நாடுகள் பிளவடைந்து வேறும் ஓர் அமைப்பு உருவாகக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் இலங்கைக்கு எதிராக பழிவாங்கும் எண்ணத்துடன் செயற்பட்டு வருதாக அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment