Monday, October 3, 2011

ஜனநாயகத்தை நிலைநிறுத்த ஐ.தே.க வுக்கு வாக்களிக்கட்டாம். கபீர் ஹாசிம்

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலில் ஐ.தே.க வை வெற்றிபெற செய்வதன் மூலமாக கட்சியை மேலும் கட்டியெழுப்ப முடியும், எமது ஆதரவாளர்கள் வீட்டில் முடங்கி கிடப்பதில் பயனில்லை ஐ.தே.க வின் வாக்குகள் தேர்தலில் வாக்குப்பெட்டிகளில் விழ வேண்டும் என்று ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு பெரியமுல்லையில் இடம்பெற்ற மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான நஸ்மியார், கயான், லக்கி ஆகியோருக்கு ஆதரவு திரட்டும் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்திகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தனவும் கலந்துகொண்டார் பாராளுமன்ற உறுப்பினர் ஹபீர் ஹாசிம் அங்குதொடர்ந்து உரையாற்றுகையில் இந்த உள்ளுராட்சி சபைதேர்தல் ஒரு சிறிய தேர்தல் இதில் வாக்களிப்பதில் பயனில்லையென்று எமது கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் கருதுகிறார்கள் இது தவறானதாகும் இந்த சிறிய தேர்தலில் ஐ,தே.க.வை வெற்றிபெற செய்வதன் மூலமாக நாங்கள் மீண்டும் எழுச்சிபெறுவோம் என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறேன், எப்போதும் ஆட்சி ஒரே இடத்தில் இருக்கும் என கூற முடியாது.

மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் சிங்கள முஸ்லிம் மக்களிடையே பிளவை ஏற்படுத்த பார்கிறது. அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் விடயத்தில் முஸ்லிம்கள் புகைப்படம் எடுக்கும் விடயத்தில் முஸ்லிம்கள் தொப்பி அணியத்தடை விதிக்கப்பட்டது. நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து நடவடிக்கை எடுத்த பிறகு தற்போது அந்த முடிவு மாற்றம் செய்யப்பட்டது என்றார்

பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன கூறுகையில் கொழும்பு மாநகர சபை தேர்தலில் மேயர் வேட்பாளர் முஸம்மில் தலைமையிலான ஐ.தே.க வினர் வெற்றி பெறுவது போல நீர்கொழும்பு தேர்தல் தொகுதியிலும் ஐ.தே.க.வினர் மாபெரும் வெற்றி பெறும் என்பது உறுதியாகியுள்ளது என்றார்

பிரதான கட்சிகளின் இறுதி தேர்தல் பிரசார கூட்டம் கொழும்பில்

எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுர்ராட்சி சபைகளுக்கான தேர்தல் இறுதிப்பிரசார கூட்டம்களை பிரதான கட்சிகள் கொழும்பில் நடத்தவுள்ளன.

ஐ.ம.சு.மு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதி தேர்தல் பிரசார கூட்டம் ஜனாதிபதி தலைமையில் கொழும்பு கிரேன்பாஸ் சந்தியில் எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது கொழும்பு மேயர் வேட்பாளர் மிலிந்த மொரகொடவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் நடத்தப்படும் இந்த பிரசார கூட்டத்தில் கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த உட்பட அமைச்சர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஐ.தே.க

ஐ.தே.க.வின் கொழும்பு மேயர் வேட்பாளர் ஏ.ஜே.எம் முஸம்மிலின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நடத்தப்படும் இறுதி தேர்தல் பிரசார
கூட்டம் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழம்பு ஜிந்துப்பிட்டியில் இடம்பெறவுள்ளது.

ஜே.வி.பி

மக்கள் விடுதலை முன்னணியின் கொழும்பு மேயர் வேட்பாளர் சுனில் வட்டவலவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் நடத்தப்படும் இறுதி தேர்தல் பிரசார கூட்டம் கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வாவின் தலைமையில் கொழும்பு கெம்பல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது

ஸ்ரீ மு.கா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கொழும்பு மாநகர வேட்பாளர் சபீக்
ராஜாப்தீனின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் நடத்தப்படும் இறுதி தேர்தல் பிரசார கூட்டம் கொழும்பு பழைய சோனகத்தெருவில் எதிர்வரும் 4 ஆம் திகதி அமைச்சர் ரவுப் ஹக்கீமின் தலைமையில் நடைறெவுள்ளது

ஜ.ம.மு

ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மேயர் வேட்பாளர் மனோ கணேசனின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் நடத்தப்படும் இறுதி தேர்தல் பிரசார கூட்டம் அக்கட்சியின தலைவர் மனோ கணேசனின் தலைமையில் கொழும்பு காக்கைதீவில் எதிர்வரும் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com