அரச புலனாய்வு துறைக்கான ஆட்சேர்ப்பு பரீட்சை
அரச புலனாய்வு துறையை மேலும் மேம்படுத்துவதற்கான ஆட்சேர்ப்பு பரீட்சை அடுத்தவாரம் நடைபெறவுள்ளது. பயிற்சி பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள்களை அரச புலனாய்வு துறையில் உள்வாங்குவதற்கான ஆட்சேர்ப்பு பரீட்சை எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நாடெங்கும் 400 மத்திய நிலையங்களில் எழுத்து மூல பரீட்சை நடைபெறும். இதுவரை அனுமதி அட்டைகள் கிடைக்காத விண்ணப்பதாரிகள் 0112-430362 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் உரிய தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
உள்நாட்டில் பயங்கரவாதம் முழுமையாக அழித்தொழிக்கப்பட்ட போதும் சர்வதேச ரீதியாக பயங்கரவாதம் தொடர்ந்தும் இயங்கி வருகின்றது. இதனை கருத்திற் கொண்டு நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், அரச புலனாய்வு துறையை பலப்படுத்துவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
0 comments :
Post a Comment