குருநாகல் மாவட்ட தேர்தல் கள நிலவரங்கள்.
இன்று நடைபெறும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் குருநாகல் மாநகர சபைக்கான தேர்தல் வாக்களிப்புக்கள் எந்தவிதமான அசம்பாவிதங்களுமின்றி மிகவும் சுமூகமான முறையில் நடபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு 12 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 19307 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள். 66 பேர் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்துள்ளார்கள் ஏழு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும் 9 சுயெச்சைக் குழுக்களும் போட்டியிடுள்ளன. இதில் மொத்தமாக 256 பேர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்கள்.
இதிலிருந்து 12 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளார்கள். தேர்தல் கடமைக்காகவும் மற்றும் வாக்குகள் எண்ணும் பணிக்காகவும் 300 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
வாக்குகள் எண்ணுகின்ற நிலையமாக குருநாகல் மாவட்டச் செயலகம் செயற்படுகிறது இங்கே நான்கு வாக்குகள் எண்ணும் பரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் முடிவுகள் வெகு வரையில் வெளியிடப்படவுள்ளதாக குருநாகல் மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அதிகாரி ஏ, ஏ, குசும் ஹெட்டிகே தெரிவித்தார்.
குருநாகல் நகர சபைத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளரும் குருநாகல் மாவட்ட ஸ்ரீ சு. கட்சி அமைப்பாளருமான அப்துல் சத்தார் அவரது ஆதரவாளர்களுடன் குருநாகல் தொலிகொன்ன மத்திய கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு வாக்களிக்கச் செல்வதைப் படத்தில் காணலாம்
இக்பால் அலி
0 comments :
Post a Comment