பரந்தனில் தன்னைத்தானே சுட்டுக்கொன்ற படைவீரன்.
கிளிநொச்சி, பரந்தன் முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் நேற்று முன்தினம் தனக்கு தானே வெடிவைத்து கொண்டுள்ளார். படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளார். நுவரேலியாவைச் சேர்ந்த விஜேவர்த்தன (வயது 22) என்பவரே மரணமானவர். இவர் இராணுவத்தின் 662 ஆவது பிரிவின் 18 ஆவது கஜபாகு றெஜிமன்ட் பிரிவைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட பிரச்சினை ஒன்றின் காரணமாக இவர் இவ்வாறான தற்கொலை முடிவுக்கு வந்துள்ளதாக அறியமுடிகின்றது.
0 comments :
Post a Comment