யாழ் மீனவர்கள் இந்திய வெளியுறவு செயலரிடம் முறப்பாடு.
இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய், நேற்று முன்தினம், யாழ்ப்பாணம் பகுதிக்குச் சென்று, அங்கு இந்திய அரசு சார்பில், கட்டப்பட்டு வரும் வீடுகளைப் பார்வையிட்டார். இதன்போது அங்கு குவிந்த யாழ் மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் புகுந்து தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதால் தாங்கள் அடையும் பாதிப்பு குறித்து அவரிடம் முறையிட்டுள்ளனர்.
இதற்குப் பதிலளித்த மத்தாய், 'வாழ்வாதாரப் பிரச்னைகளில் இது ஒன்றாக இருக்கலாமே தவிர, இதில் வன்முறை நிகழ்வதற்கு வாய்ப்பில்லை. இருதரப்பு மீனவர்களின் பிரதிநிதிகளும் ஒன்றாகக் கூடி, கலந்தாலோசித்து, இப்பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும்' என யாழ் மீனவர்களிடம் வேண்டியுள்ளார்.
தொடர்ந்து, ஜனாதிபதி ராஜபக்ஷேவைச் சந்தித்த மத்தாய், இப்பிரச்னை குறித்து கலந்தாலோசித்தார். இதன்போது இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதான செய்திகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment