பாதுகாப்புச் செயலரின் அணுகுமுறை என்னை வியப்புக்குள்ளாக்கியது. ராம்.
கொழும்பு வாழ் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற முறையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் எந்தவொரு பிரச்சனையும் நீங்கள் முன்வைத்தால் அதற்கான உரிய தீர்வை பெறுவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தன்னிடம் தெரிவித்ததாக அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற மாநகரசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற சி.வை.பி. ராம் கூறியுள்ளார்.
இது தொடர்பில் ராம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கொழும்பில் வாழும் வசதி குறைந்த மக்களின் வாழ்வாதார மேம்பாட்டைக் கட்டி எழுப்புவதற்காக நகர அபிவிருத்தி சபையூடாக விசேட திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் இதற்கான சில நிகழ்ச்சித் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பில் தமது ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை முன்வைக்கும் பொருட்டு பாதுகாப்பு செயலரை சந்தித்தபோது அவர் என்னை அணுகியவிதம் மிகவும் வியப்படைய வைத்ததாகவும் மேற்படி விடயங்களுக்கான அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்புகளைப் பேணுவதற்கும் பாதுகாப்புச் செயலர் உரிய ஏற்பாடுகளைச் செய்து தந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment