நிமல்காவின் வீட்டில் ஆயுதங்கள், போதைப்பொருள் தேடவில்லையாம்.
மேல்மாகாண அமைச்சர் நிமல்லான்ஸாவின் இல்லத்திற்கும் அவரது ஆதரவாளர்களான வர்த்தகர்கள் சிலரது வீட்டுக்கும் விஷேட அதிரடிப் படையினர் திடீர் சோதனை மேற் கொண்டது போதைவஸ்த்து மற்றும் ஆயுதங்களை கண்டு பிடிப்பதற்காக அல்ல என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இணைத்துப் பொருத்தப்பட்டுள்ள வாகனம் தொடர்பாக கிடைத்த தகவலை அடுத்தே சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மெக்ஸி புரொக்கடர் தெரிவித்துள்ளார்.
திங்கட் கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின் போது பொலிஸ் விஷேட அதிரடிப் படையை சேர்ந்த 150 வீர்ர்கள் பங்கு பற்றியுள்ளனர்.இதன்போது விஷேட அதிரடிப் படையின் மோட்டார் சைக்கிள் பிரிவு வீரர்களும் பங்கு பற்றியுள்ளனர்.
இந்நிலையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ மேல்மாகாண அமைச்சரின் இல்லத்திற்கு நேரில் சென்று இது தொடரபாக நேற்று விசாரித்தார்.நீதிமன்ற உத்தரவின்றி மேல்மாகாண அமைச்சர் நிமல்லான்ஸாவின் இல்லத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment