ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒரு போதும் தேர்தலில் வெற்றிபெற முடியாது - ருக்மன் சேனாநாயக்க
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைவராக தொடர்ந்து இருப்பாரானால் கட்சி எப்போதுமே தேர்தலில் வெற்றி பெறமுடியாது எனவும் இதன் காரணமாக கட்சி சம்மேளனத்தைக் கூட்டி இந்த தலைவரை நீக்குவதன் மூலம் கட்சியைக் காப்பாற்றுமாறும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர்களான கருஜயசூரிய மற்றும் சஜித் பிரேதாஸ ஆகியோரை கேட்டுக்கொள்வதாக அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளரான ருக்மன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ருக்மன் சேனாநாயக்க இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அவர் அங்குதொடர்ந்து கருத்து தெரிவித்துள்ளதாவது,
வேறு நாடுகளில் என்றால் தேர்தலில் ஒரு கட்சி தோல்வி அடைந்தால் அந்த கட்சியின் தலைவர்கள் தமது பதவிகளில் இருந்து விலகிவிடுவாகள். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியில் இந்நிலை காணப்படாதது கவலை தரும் விடயமாகும்.
0 comments :
Post a Comment