இப்படியும் ஒரு அமைச்சர்! - சகாயராஜ்
10ஆம் வகுப்பு தேர்வை ஆள் மாறாட்டம் செய்து எழுதிய அமைச்சர் ஒருவர் வசமாக சிக்கியுள்ளார். புதுச்சேரியை சேர்ந்த கல்வித்துறை அமைச்சர் கல்யாண சுந்தரம் தான் அந்த முக்கிய புள்ளி. புதுச்சேரியில் புதிதாக ஆட்சியை பிடித்த ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ் அரசில் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் பி.எம்.எல்.கல்யாண சுந்தரம். படிப்பு அறிவே இல்லாதவர் புதுச்சேரியில் கல்வித்துறை அமைச்சராக இருக்கிறார் கல்யாண சுந்தரம்.
முதலமைச்சர் ரங்கசாமிக்கு வலதுகரமாக இருப்பவர்தான் இந்த கல்யாண சுந்தரம். இவரிடம் கல்வித்துறை மட்டுமின்றி போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், கல்லூரிகள் கல்வி மற்றும் பள்ளி கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், கலை மற்றும் கலாச்சாரம், அரசு ஆட்டோமொபைல் பட்டறை உள்ளிட்ட துறைகள் இருக்கின்றன.
படிப்பறிவு இல்லாத கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரம், கடந்த 1991ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளார். தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்ற அவர், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை.
10ஆம் வகுப்பை கூட நம்மால் முடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் அமைச்சர் கல்யாண சுந்தரம் மனதில் ஓடிய நிலையில், கடந்த மாதம் செப்டம்பர் 29ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அறிவியல் பாடத்தை எழுதியுள்ளார். அப்போதுதான் தெரியவந்தது படிப்பாத மேதையான கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரம்.
பெரும் பரபரப்பாக பேசப்பட்ட கல்யாண சுந்தரம் அடுத்த நாள் நடைபெற்ற சமூக அறிவியல் தேர்வை எழுதவரவில்லை. ஆனால் தனக்கு பதில் வேறு ஆளை பயன்படுத்தி சமூக அறிவியல் தேர்வை எழுதியுள்ளார் கல்யாண சுந்தரம்.
ஆள் மாறாட்டம் செய்து அமைச்சர் கல்யாண சுந்தரம் தேர்வு எழுதியதை கண்டுபிடித்தனர் தமிழக கல்வித்துறை அதிகாரிகள். இதற்கு உடந்தையாக இருந்த ஆசிரியர் ஆதவன், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலக இளநிலை உதவியாளர் ரஜினிகாந்த் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது தமிழக அரசு.
நன்றி வெப்துனியா
3 comments :
இவரோட ஒப்பிடும்போது டக்களஸ் , பிள்ளiயான் , கருணா ஏன் தமிழ் தேசியக் கூட்டமைபின் 3ஃ4 பேரும் பறவாயில்லைபோல். ஏனென்றால் இவங்கள் எல்லாரும் 5ம் வகுப்பு றேஞ்சில உள்ள ஆக்கள்தான், ஆனாலும் கள்ள சேட்டிபிக்கட் எடுக்கவோ, குதிரை ஓடவோ முயற்சிக்கல.
இவரோட ஒப்பிடும்போது டக்களஸ் , பிள்ளயான் , கருணா ஏன் தமிழ் தேசியக் கூட்டமைபின் 3/4 பேரும் பறவாயில்லைபோல். ஏனென்றால் இவங்கள் எல்லாரும் 5ம் வகுப்பு றேஞ்சில உள்ள ஆக்கள்தான், ஆனாலும் கள்ள சேட்டிபிக்கட் எடுக்கவோ, குதிரை ஓடவோ முயற்சிக்கல.
இதை விடக் கேவலம் முற்பது வருட புலிகளின் வடக்கு கிழக்கு ஆட்சியில் நடந்து முடிந்துள்ளது.
களவு, கொலை, கொள்ளை செய்தவன் நீதித்துறை, எழுத வாசிக்க தெரியாதவன் கல்வித்துறை, மயிர் வெட்டியவன் அரசியல்துறை, மீன்பிடித்தவன், கள்ளுசீவினவன் எல்லாம் பாதுகாப்புத்துறை, ஏஜென்சி நடத்தி மக்களை ஏமாற்றியவன் வெளிநாட்டுத் தொடர்புத்துறை, கசிப்புகாச்சினவன், கள்ளக்கடத்தல் செய்தவன் உளவுத்துறை இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம்.... அத்தனைக்கும் தலையாட்டி, ஆமா போட்ட தமிழ் அறிவுக்கொழுந்துகள், மதிகெட்ட மாணவர் கூட்டம், சுயநல புலம்பெயர் கூட்டம் என்றும் மறக்கமுடியுமா எமது சூத்தைகளை..
Post a Comment