சிலர் அரசதரப்புடன் இரகசிய பேச்சுவார்த்ததையில் ஈடுபட்டுள்ளனர்- ஸ்ரீலால் லக்திலக்க
ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ளவர்கள் சிலர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அந்தக் கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் ஸ்ரீலால் லக்திலக்க தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தை பேணாமல் அரசியல் கட்சியொன்று செயற்பட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலி-லக்வெல்ல முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுபையிலேயே அவர் மேற்சொன்னவாறு குறிப்பிட்டார்.
கட்சியின் ஒழுக்க நெறியினை மீறிய குற்றச்சாட்டில் ஸ்ரீலால் லக்திலக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண ஆகியோர் கட்சித் தலைவரினால் அண்மையில் கட்சி உறுப்புரிமையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment