பிரதி மேயராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட சகாவுல்லாஹ்வுக்கு நீர்கொழும்பில் பெரு வரவேற்பு
நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயராக இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட ஜனாப் எம்.எஸ்.எம். சகாவுல்லாஹ்வுக்கு நீர்கொழும்பு நகரில் இன்று பெரு வரவேற்பளிக்கப்பட்டது.
நீர்கொழும்பு நகர மத்தியில் மணிக்கூட்டு கோபுரம் அருகில் அவரது ஆதரவாளர்களினால் பிரதி மேயர் சகாவுல்லாஹ் மாலை அணிவித்து முதலில் வரவேற்கப்பட்டார்.இந்நிகழ்வு இன்று பிற்பகல் 123.30 மணியளவில் இடம்பெற்றது.
அங்கு அவர் ஊடகவியலாளர்னளுக்கு கருத்து தெரிவித்த போது,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் சார்பில் போட்டியிட்ட தனக்கு 8942 என்ற இரண்டாவது அதி கூடிய விருப்பு வாக்குகளை அளித்த சகலருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும்,புதிய மேயர் அன்ரன் ஜயவீரவுடன் இணைந்து நகரில் பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வாகனப் பேரணியாக நகரின் சகல இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்ட பிரதிமேயருக்கு பெருவரவேற்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரதி மேயராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் மாநகர சபை உறுப்பினரான எம்.எஸ்.எம். சகாவுல்லாஹ் நீர்கொழும்பு மாநகர சபைக்கு பிரதி மேயராக நியமிக்கப்பட்ட இரண்டாவது முஸ்லிம் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 2009 ஆம் ஆண்டு நடை பெற்ற மேல்மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு இவர் 21 ஆயிரம் வரையான வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாப் சகாவுல்லாஹ் சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட முஸ்லிம் பிரிவின் தலைவராகவும் உள்ளார். வென்னப்புவ ஜோசப்வாஸ் கல்லூரியின் மாணவரன இவர், நீர்கொழும்பு வலய சிங்கள மொழிப் பாடசாலை ஒன்றில் விளையாட்டுத் துறை ஆசிரியராகவும் பல வருடகாலம் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் – எம்.இஸட். ஷாஜஹான்
0 comments :
Post a Comment