கண்டி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் கண்டி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய அனுசரணையுடன் 1008 அகல் விளக்கேற்றும் விசேட சமய நிகழ்வு இன்று மாலை ஆறு மணி அளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருந் தொகையான பக்தர்கள் கலந்து கொண்டு அகல் விளக்குகளை ஏற்றினர்.
அத்துடன் கண்டி தமிழ் வர்த்தக சங்கம் வரலாற்றில் முதற் தடவையாக தீபாவளித் திருநாள் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு விழா கண்டி தமிழ் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் கண்டியில் வரலாற்றில் முதற்தடவையாக தீபாவளித் திருநாள் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு விழா கண்டி கண்டி திரித்துவக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. கண்டி தமிழ் வர்த்தக சங்கத் தலைவர் லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பூச்சரம் கட்டுதல், கயிறு இழுத்தல், நூறு மீட்டர் ஓட்டம், அஞ்சல் ஓட்டம் , சங்கீதக் கதிரை உள்ளிட்ட பல தமிழ் பாராம்பரிய விளையாட்டுக்களைக் கொண்ட நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் கண்டி மாநகர முதல் மகேந்திரா ரத்வத்த, மற்றும் தமிழ் வர்த்தகச் சங்கத்தின் குடும்பஸ்தர்கள் உள்ளிட்ட பலா கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment