கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு - கண்டி பிரதான வீதியின் 25ம் கட்டை பகுதி பெலும்மஹர பாடசாலைச் சந்தியில் கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த பவுஸர் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வீட்டின்மீது மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியானதோடு ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து இன்று அதிகாலை 04.15 அளவில் இடம்பெற்றுள்ளது.
31 வயதுடைய சுனில் திலகரட்ன என்ற சாரதியும் ஹட்டன் டிக்கோயா பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ராமசாமி சசிதரன் என்ற நடத்துனருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் வீட்டில் இருந்த பெண் படுகாயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுக்கு சிறு காயங்களே ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் கூறியுள்ளார்.
கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment