Thursday, October 20, 2011

கணவருடன் உரையாடுவதை விட நாய்களுடன் அதிகளவு உரையாடும் பெண்கள்!

பெண்களில் 5 பேரில் ஒருவர் தமது கணவருடன் உரையாடுவதை விட தமது வளர்ப்பு நாய்களுடனேயே அதிகளவு உரையாடுவதாக பிரித்தானிய ஆய்வொன்று கூறுகிறது. நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் 2000 பிரித்தானிய பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் போது அவர்களில் 18 சத வீதமானவர்கள் தமது கணவரிடம் மற்றும் காதலரிடம் உரையாடுவதை விட நாய்களுடன் உரையாடுவதற்கு அதிக நேரத்தை செலவிடுவது கண்டறியப்பட்டுள்ளது. 42 சத வீதமான நாய் உரிமையாளரான பெண்கள் தமது நோய்வாய்ப்பட்ட செல்லப்பிராணிளை கவனிப்பதில் நேரத்தை செலவிடுகின்றனர்.

இந்த ஆய்வானது பாகெஸ் சுபாடோக் சென்சிற்றிவ் நிறுவனத்தை சேர்ந்த நாய் உணவுகள் தொடர்பான நிபுணரான றிச்சர்ட் ரொக்கெட்டால் நடத்தப்பட்டது.

No comments:

Post a Comment