அந்தமான் தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள கந்தக்குளிய மீனவர்கள் அறுவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்து, இலங்கைக்கு அழைத்து வருமாறு கோரி அந்தக் கிராமத்தில் உள்ள பௌத்த மதகுருமார் இருவர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் உண்ணா விரதமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து வயோதிப மீனவ தாயார் ஒருவரும் உண்ணாவிரத்தில் குதித்துள்ளார்.இவரை பரிசோதித்த வைத்தியர்கள் உடல் நிலையை கருத்திற் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுள்ளனர்.
இந்த வயோதிப தாயாரின் ஒரு மகன் 19 வயதில் கடலில் வைத்து மரணமாகிள்ளார்.தற்போது அந்தமான் தீவில் சிறைவைக்கப்பட்டுள்ளவர் அவரது இரண்டாவது மகனாவார்.இரண்டாவது மகன் இல்லாமல் தான் ஏன் உயிர் வாழவேண்டும் என்று அந்தத் தாயார் கேட்கிறார்.
செய்தியாளர் –எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment