Saturday, October 29, 2011

எனது உயர்வுக்கு அமைச்சர் நிமல்லான்சாதான் காரணம்- நீர்கொழும்பு மேயர் அன்ரனி

நான் கனவில் கூட மேயராவேன் என்று நினைத்ததில்லை. இறைவனின் நாட்டப்படியே எல்லாம் நடக்கிறது .இறை நாட்டப்படி ஒருவருக்கு கிடைக்க இருப்பது கிடைத்தே தீரும். .நீர்கொழும்பு நகர அபிவிருத்தியின் தந்தையும் முன்னாள் மேயரும், மேல்மாகாண அமைச்சருமான நிமல்லான்ஸாதான் எனது வளர்ச்சிக்கு பிரதான காரணகர்த்தாவாவார் என்று நீர்கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர் அன்ரனி ஜயவீர குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர், பிரதி மேயர் ஆகியோரின் பதவியேற்பு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மாநகர சபையின் உறுப்பினர்களாக தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வும் வெள்ளிக்கழமை(28) இடம்பெற்ற போதே, பதவியேற்பின் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேயர் அன்ரனி ஜயவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பதவியேற்பு மற்றும் சத்திய பிரமாண நிகழ்வு நேற்று காலை 8 மணியளவில் நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க , மேல்மாகாண அமைச்சர் நிமல்லான்சா, மேல்மாகாண சபை உறுப்பினர்கள். கம்பஹா மாவட்ட செயலாளர் ,நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ,கட்சி முக்கியஸ்தர்கள் சமயத்தலைவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்

பிரதி மேயர் சகாவுல்லாஹ் அங்கு உரையாற்றுகையில்,

நீர்கொழும்பு மாநகர சபை கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக இருந்தது. எமது ஆட்சி இருந்தது சிறிய காலப்பகுதியாகும் . ஆனால் அந்த சிறிய காலப்பகுதியில் நகரம் மிகப்பெரிய அபிவிருத்தியை கண்டது. இதை யாரும் மறுக்க முடியாது. தேர்தலில் போட்டியிட்ட 32 வேட்பாளர்களின் முயற்ச்சியினால்தான் எமது கட்சி 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேலதிக வாக்குகளால் தேர்தலில் வெற்றி பெற்றது என்பதை யாரும் மறக்க கூடாது என்றார்

மேல்மாகாண அமைச்சர் நிமல்லான்ஸா அங்கு உரையாற்றுகையில்,

1997 ஆம் ஆண்டு 500 மேலதிக வாக்குகளாலும் 2011 ஆம் ஆண்டு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளாலும் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் எமது கட்சியினால் வெற்றி பெற முடிந்தது. இந்த வளர்ச்சிக்கு காரணம் நாங்கள் நகரில் மேற்கொண்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களாகும் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே பத்து முதல் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளால் நாங்கள் வெற்றி பெறுவொம் என்றும், 16 உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என்றும் நான் குறிப்பிட்டேன். அது போலவே நடந்தது .நகரில் 75 சத வீதமான வீதி அபிவிருத்தி வேலைகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய 25 வீத வேலைகள் இனி நடைபெறும். நகரின் வாராந்த சந்தைகள் உட்பட மேலும பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. கொழும்ப நகரத்துக்கு அடுத்ததாக பொருளாதார ரீதியில் மிகவும் முன்னேற்றமடைந்த நகரமாக நீர்கொழும்பு நகரம் அபிவிருத்தி செய்யப்படும் இதுவே எமது திட்டமாகும் என்றார்.

மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாஅங்கு உரையாற்றுகையில்,

புதிய மேயரின் சேவையை நகர மக்கள் ஏற்றுக்கொண்டதன் காரணமாகவே அவரால் 21 வருட காலமாக மாநகர சபை உறுப்பினராக இருக்க முடிந்துள்ளது. எமது ஜனாதிபதி சகல இன மக்களையும் நேசிப்பவர் பலஸ்தீன முன்னாள் தலைவர் யாசிர் அரபாத் ஒரு தடைவை இலங்கை வந்த போது ஒரு விடயத்தை என்னிடம் கூறினார். தான் இலங்கை வந்ததற்கு இரண்டு பிரதான காரணங்கள் இருப்பதாகவும், அதில் ஒன்று உலகின் முதல் பெண் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக என்றும் இரண்டாவது காரணம் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் என்றும்தெரிவித்தார். இவ்வாறு மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா குறிப்பிட்டார்.

இந்திகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினராக தெரிவாகியுள்ள மொஹமட் இஹ்சான் மேல்மாகாண ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். செய்தியாளர் –எம்.இஸட்.ஷாஜஹான்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com