சிறந்த அரச துறை நிறுவனத்துக்கான சார்க் பிராந்திய பியுசர்கோ விருலை இலங்கை ஓய்வூதிய திணைக்களம் பெற்றுள்ளது மலேசியாவின் சைபஜயா நகரில் நடைபெற்ற சார்க் பிராந்திய பியுசர்கோவிருது வழங்கும் வைபவத்தின் போதே இலங்கையில் சிறந்த அரச துறை நிறுவனமாக ஓய்வூதியத் திணைக்களம் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
ஓய்வூதிய திணைக்களத்தின் ஈ பென்சன் திட்டம் இந்த விருதுக்காக அங்கீகரிக்கப்பட்டு விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இவ்விருது வழங்கும் வைபவத்தில் 250 க்கும் மேற்பட்ட பல நாடுகளையும் சேர்ந்த அரச நிறுவன அதிகாரிகள் பங்கு பற்றியிருக்கின்றனர் வருடம்தோறும் நடத்தப்படும் இவ்விருது வழங்கலுக்காக இம்முறை 16 நாடுகளைச்சேர்ந்த 498 அரச நிறுவனம்கள் வின்னப்பித்திருந்தன.
No comments:
Post a Comment