Saturday, October 1, 2011

சுவிட்சர்லாந்திலும் பர்தாவுக்குத் தடை!

பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்தை தொடர்ந்து சுவிட்சர்லாந்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பதாக காரணங்காட்டி பர்தாவுக்குத் தடை விதிக்கப்படுகிறது. பொது இடங்கள், பொது போக்குவரத்தின் போது, முகத்தை மூடி அணியும் பர்தா அணிவதற்கு தடைவிதிக்கும் சட்ட மூலம் சுவிட்சர்லாந்தில் பர்தா தடை அமுலுக்கு வருகிறது.

இதற்கான அங்கீகாரத்தை சுவிஸ் பாராளுமன்றம் வழங்கியுள்ளது. சுவிட்சர்லாந்தின் வலதுசாரிக் கட்சியான எஸ்.வி.பி கட்சியினால், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இதற்கான வடிவம் முன் வைக்கப்பட்டது. அக்கட்சியின் உறுப்பினர் ஒஸ்கார் பிறேசிங்கர் இதனை தனது கட்சியின் சார்பில் சபையில் முன்மொழிந்திருந்தார்.

இச்சட்டத்திற்கு ஆதரவாக 101 வாக்ககளும், எதிராக 77 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன. பெரும்பான்மை வாக்கின் அடிப்படையில் இச்சட்டம் அரசின் அங்கீகாரத்தைப் பெற்று நடைமுறைக்கு வருகிறது.

-Thoothu Online-

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com