பூனாவ கடற்படை முகாமின் களஞ்சிய சாலையை உடைத்து சீருடைத்துணிகளை திருடி விற்பனை செய்த சந்தேக நபரான கடற்படை வீரரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுர மேலதிக நீதிபதி சந்திம எதிரிமான்ன உத்தரவிட்டார்.
பூனாவ கடற்படை முகாமின் களஞ்சிய சாலை உடைக்கப்பட்டு திருடப்பட்டிருப்பது பற்றி மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த கடற்படை வீரர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். விளக்க மறியலில் வைக்கப்பட்டவர் அம்பலங்கொட பகுதியை நிரந்தர வசிப்பிடமாக கொண்ட உபுல் நிசாந்த சில்வா என்ற கடற்படை வீரராவார். பல்வேறு தடவைகள் இவர் சீருடை துணிகள், பொத்தான்கள் மற்றும் சீருடைகளில் பொருத்தும் பதக்கம்கள் என்பவற்றை திருடி முச்சக்கர வண்டியொன்றில் எடுத்துச்சென்று மதவாச்சி, அனுராதபுரம் மற்றும் குருணாகல் பகுதிகளிலுள்ள கடைகளுக்கு விற்பனை செய்ததாக சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட அரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment