கொலன்னாவ மக்களை தனிமைப்படுத்தப் போவதில்லை - பாரத லக்க்ஷ்மனின் புதல்வி
துப்பாக்கிச் சூட்டு சண்டையில் கொல்லப்பட்ட முன்னாள் எம்பியும் ஜனாதிபதியின் ஆலோசகருமானபாராத லக்ஷ்மனின் அமரர் பாரத லக்க்ஷ்மன் பிரேமச்சந்திரவின் புதல்வியான ஹிருனிகா பிரேமச்சந்திர தனது தந்தையின் அரசியல் பணியைத் தான் முன்னெடுப்பது குறித்து ஆலோசிப்பதாக தெரிவித்துள்ளார். கொலன்னாவ மக்களை தனிமைப்படுத்தப் போவதில்லை எனவும் எதிர்வரும் நாட்களில் அரசியலில் பிரவேசிக்கும் உத்தேசம் இருப்பதானவும் ஹிருனிகா குறிப்பிட்டுள்ளார்.
தனது தந்தை மீது மக்கள் கொண்டிருந்த பாசத்தினைத் தன்னால் மேலும் உணரக் கூடியதாக உள்ளதாகவும், அந்த மக்கள் எனது தந்தையின் அரசியல் பணியை ஏற்றிருந்தனர் எனவும் இந்த நிலையில் மக்களுக்குச் சேவை செய்யும் பொருட்டு தந்தையின் பணியைத் தான் முன்னெடுப்பது குறித்து ஆலோசிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது தந்தை அரசியலில் காலடி எடுத்து வைத்த காலம் தொட்டே பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருந்தார். இருப்பினும் மக்களுக்குச் சேவை செய்வதனையே அவர் தனது நோக்கமாகக் கொண்டிருந்தார் எனவும், அரசியல் வாழ்வில் தனது தந்தை பணத்தையோ சொத்துகளையோ சேர்க்கவில்லை. பதிலாக மக்களின் ஆதரவினையே அதிகரித்துக் கொண்டார் என்றும் ஹிருனிகா தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளதாவது, தந்தைக்கு பெருமளவில் மக்கள் ஆதரவு காணப்பட்டது, அனைவர் மீதும் அன்பு காட்ட வேண்டும் என்பதே தந்தையின் கொள்கையாக அமைந்திருந்தது. தந்தை அரசியல் வாழ்க்கையில் பல்வேறு அனர்த்தங்களையும், அழுத்தங்களையும் எதிர்நோக்கினார். நீண்ட காலமாக அரசியலில் ஈடுபட்ட போதிலும் தந்தை சொத்துக்களையும் பணத்தையும் சம்பாதிக்கவில்லை மாறாக மக்களை சம்பாதித்துள்ளார்.
மட்டக்களப்பு போன்ற தூர பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் தந்தையின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்துள்ளனர். எனினும் தாக்குதலை நடத்திய மற்றைய அரசியல்வாதி உயிருக்கு போராடி வருகின்ற போதும் மக்கள் அவரைச் சென்று பார்வையிடவில்லை என்று பாரத்தவின் புதல்வி ஹிருனிகா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment