Tuesday, October 25, 2011

விக்கிலீக்ஸ்-ஐ முடக்கும் அமெரிக்க கரங்கள்.

அமெரிக்கா உள்ளிட்ட ஒவ்வொரு நாடும் தங்களது தூதரங்களின் மூலம் அந்த நாட்டில் ‘ஆற்றும் பணி’களையும், அளித்த விவரங்களையும் முழுமையாக வெளியிட்டு, உலக மக்களிடையே பெரும் விழுப்புணர்வை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் இணையத் தளத்தை முடக்க, அதற்கு நன்கொடை கிடைக்கும் வழிகளையெல்லாம் அடைத்துள்ளது.

விக்கிலீக்ஸ் இணையத் தளத்திற்கு நன்கொடை அளிப்போர் இதுநாள்வரை விசா, மாஸ்டர் கார்ட் ஆகிய கடன் அட்டைகள் மூலமும், பேபால், வெஸ்டர்ன் யூனியன் ஆகிய நிதி மாற்ற அமைப்புகள் மூலமும், அமெரிக்க வங்கியின் வாயிலாகவும் அளித்து வந்தனர். இப்போது அந்த நிறுவனங்கள் அனைத்தும் விக்கிலீக்ஸ் கணக்கை தாங்கள் நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துவிட்டன.

இதன் காரணமாக நன்கொடை வரத்து இன்றி, பல்வேறு நாடுகளில் தங்களுடைய பணிகளை இயக்க முடியாமல், தாங்கள் எடுக்கும் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும், தரவுகளை சேமித்து வைக்கவும் பயன்படுத்தும் சர்வர்களுக்கு ஆகும் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.

மேற்கூறப்பட்ட நிதி அமைப்புகள் விக்கிலீக்ஸ் கணக்குகளை முடக்கியுள்ளதால், அதற்கு கிடைக்க வேண்டிய 95% நன்கொடை வரவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள விக்கிலீக்ஸ், இதற்கு மேல் நன்கொடை அனுப்ப விரும்புவோர் அதனை எந்தெந்த அமைப்புகள் வழியாக எப்படி அனுப்பலாம் என்பதை தனது இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment