கடாபியின் பெயரில் கணனி வைரஸ்கள்
லிபியாவின் முன்னாள் அதிபர் முகம்மர் கடாபி கொல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் பற்றிய செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வெளி வந்தபடியுள்ளன.
கடாபி தொடர்பான செய்திகளின் மீது மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதே இதற்கான காரணமாகும்.
ஆயினும் இதனை நன்கு அறிந்து வைத்துள்ள விஷமிகள் சிலர் கடாபியின் புகைப்படத்துடன் கூடிய செய்தியை கணனிகளுக்கு தீங்கு விளைவிக்கும் மெல் வெயார்களையும் சேர்த்து மின்னஞ்சல்கள் மூலம் அனுப்புவதாக இணைய பாதுகாப்பு மென்பொருள் நிறுவனம் சோபொஸ் தெரிவித்துள்ளது.
ஒருவரது தனிப்பட்ட தகவல்களைத் திருடுதல், கணனியை முற்றிலும் செயலிழக்கச் செய்தல் என்பன போன்ற பல தீங்கான நடவடிக்கைகள் இதன்மூலம் நடைபெறுவதாக சோபொஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
0 comments :
Post a Comment