இந்தியாவில் வசித்த அகதிகளில் ஒரு தொகுதியினர் இன்று காலை நாடு திரும்பினர்
இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து சென்று இந்தியாவில் வசித்துவந்த அகதிகளில்ஒரு தொகுதியினர் இன்று புதன்கிழமை காலை நாடு திரும்பினர். கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இவர்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்க்ஷ வரவேற்றார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பிரிவுக்கான ஆளுநரின் ஏற்பாட்டில் இலங்கை - இந்திய நாடுகளின் புரிந்துணர்வின் அடிப்படையில் இவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். இவ்வாண்டில் மாத்திரம் சுமார் 1400 அகதிகள் நாடு திரும்பியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையினால் வயதுவந்த நபர் ஒருவருக்கு தலா 10 ஆயிரம் ரூபாவும் வயது குறைந்த சிறுவர்களுக்கு 7 ஆயிரத்து 500 ரூபா வீதமும் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒவ்வொருவருக்கும் 2 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஐநா அகதிகள் அமைய இலங்கை உயர்ஸ்தானிகர் மிசெல் ஸ்வெக், பிரதி பிரதிநிதி ஜெனிப்பர் பகோனிஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment