காலி, உனவட்டுன பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் உள்ளுர்வாசிகளுக்குமிடையில் நேற்றிரவு இடம்பெற்ற கைகலப்பின் போது ஏழு போ் காயமடைந்த கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஐந்து வெளிநாட்டவர்களும் இரண்டு உள்நாட்டவர்களும் அடங்குவர். காயமடைந்த வெளிநாட்டவர்களில் ரஷ்யாவைச் சோ்ந்த நால்வரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர். காயமடைந்த அனைவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சமபவம் தொடர்பில் இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து வெளிநாட்டவர்களும் தங்களது மருத்துவக் கட்டணங்களை செலுத்தாமல் அங்கிருந்துதப்பிச் சென்றுள்ளனர். இனந்தெரியாத பிரயாண வழிகாட்டி ஒருவரால் இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
காலி, உனவட்டுன கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் ஏற்பட்ட தகராற்றை அடுத்தே ஐந்து வெளிநாட்டவர்களும் இரண்டு உள்நாட்டவர்களும் காயமடைந்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment