கொழும்பு உக்ரேன் நேரடி விமான சேவை ஆரம்பம்.
இலங்கைக்கும், யுக்ரேனுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில், முதலாவது விமானம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. யுக்ரேனின் மிகப்பெரிய விமான கம்பனியான எபோஸிபிட் கம்பனிக்கு சொந்தமான இந்த விமானம், நேற்று முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
பிரதி செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த விமான சேவை இடம்பெறவுள்ளது. இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், இலங்கைக்கு வருகை தந்த யுக்ரேன் பிரஜைகளை சம்பிரதாயபூர்மமாக வரவேற்றது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், யுக்ரேன் சுற்றுலாப் பயணிகள், பெருமளவில் இலங்கைக்கு வருகை தந்தமையினால், இந்த புதிய விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதாக, சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்தார்.
2008 ஆம் ஆண்டு யுக்ரேனிலிருந்து 958 பேர், இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 2009 ஆம் ஆண்டு இது 2 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இது 5 ஆயிரத்து 700 ஆக மேலும் அதிகரித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையை தொடர்ந்து, இரு தரப்பு உறவுகள் மேலும் வலுவடைகின்றன. எதிர்காலத்தில் இதனைவிட கூடுதலான யுக்ரேன் உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் எயார் லங்கா விமான சேவைகளும், யுக்ரேனுக்கு நடாத்தப்படும்.
0 comments :
Post a Comment