Thursday, October 13, 2011

புத்திக பத்திரண, ஸ்ரீலால் லக்திலக ஐ.தே.க விலிருந்து நீக்கம்

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரை கடுமையாக விமர்சனம் செய்து வந்த மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் ஸ்ரீலால் லக்திலக்க ஆகியோரின் கட்சி உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில். கட்சியின் கொள்கைக்கு மாறாக கட்சியின் தீர்மானங்களை மதிக்காது வெளி இடங்களில் கருத்து வெளியிட்ட குற்றத்திற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கட்சியின் பெரும்பான்மை தீர்மானத்திற்கு ஏற்பவே செயற்பட வேண்டும் எனவும் அதற்கு அப்பால் சென்று செயற்பட முடியாது எனவும் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com