மரண அச்சுறுத்தல் விடுத்து கப்பம்பெற்ற பாதாள உலக உறுப்பினர் கைது-கப்பப்பணமும் மீட்பு
தொலைபேசியூடாக கொலை அச்சுறுத்தல் விடுத்து பல இலட்சம் ரூபாவை கப்பமாக பெற்ற பாதாள உலகத்தை சேர்ந்த நபர் ஒருவரை கப்பமாக பெற்ற பணத்துடன் நீர்கொழும்பு பொலிசார் கைது செய்துள்ளனர். ஜப்பமால மாவத்தை, பிரதான வீதியை சேர்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்படடுள்ளவராவார்.
நீர்கொழும்பு-சாந்த ஜொசப் வீதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடமும் தலாதூவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரிடமும் தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுத்து பல தடவைகள் கப்பம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கப்பம் தொடர்பாக nhலிசாரிடம் முறைப்பாடு செய்தால் கொலை செய்வதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை காரணமாக பலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவில்லை என்று விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இதுவரை இது தொடர்பாக 5 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதகவும் இது போன்று கப்பம் செலுத்தியவர்கள் இருந்தால் அவர்கள் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யலாம் எனவும் என்று சிரேஸ்ட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பாதாள உலகத்தலைவர் ஒருவரின் திட்டமிட்ட குழுவொன்றே இதன் பின்னணியில் இருப்பதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி கல்லவவின் வழிகாட்டலில் குற்றப்புலனாய்வு பிரிவு பொலிசார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
வெளி நாட்டிலிருந்து நாடு திரும்பிய பெண்ணின் பொருட்களை திருடிய இருவருக்கு பிணை
வெளி நாடொன்றில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து விட்டு நாடு திரும்பிய பெண்ணிடம் வீட்டுக்கு செல்வதற்கு வாடகை வாகனம் ஒன்றை பெற்றுதருவதாக கூறிவிமான நிலையத்தில் வைத்து அந்தப்பெண்ணின் 30 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய சம்பவம்தொடர்பாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவரை நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் தலா 10 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுதலைசெய்ய உத்தரவிட்டார்.
கட்டானை –எக்கால, ரந்தாவான-பன்சல ஆகிய பிரதேசம்களை சேர்ந்த இரு நபர்களே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவர்களாவர். வழக்கின் முறைப்பாட்டாளர் பயாகல விஹாரகந்த வீதியை சேர்ந்த எச் கமலாவதி என்பவராவார். இவர் கட்டுநாயக விமான நிலைய பொலிசாரிடம் செய்த முறைப்பாட்டையடுத்து அடுத்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment