கொழும்பு நகரில் திண்மக் கழிவுகளை அகற்றுதற்கும் மற்றும் பரிசுத்தமான மேற்பார்வைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளை அந்த சேவைகளிலிருந்து இல்லாமற் செய்வதற்கும் இந்த அரசாங்கத்தின் வேலைப்பணிகைளை முன்னெடுத்துச் செல்வதற்கு தான் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அரசு இந்த வேண்டுகோளை நிராகரித்தாலும் கொழும்பு நகரில் குப்பைகளை அகற்றுவதற்காக தான் அதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிரதேச சிவில் மக்கள் குழுக்கள் மற்றும் நகர சபையின் குப்பை கூழங்களை பரிசோதனையிடும் அதிகாரிகள் ஆகியோரை ஒன்றிணைத்து பாரிய பரிசோதனை செய்யும் நடடிவடிக்கையில் ஈடுபடுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்
தான் மாநகர முதல்வராக பதவியேற்றதுடன் கொழும்பு நகர் சிறந்த நகரமாக விளங்குவதற்கான வேலைப் பணிகள் செயற்படுத்தப்படவுள்ளதோடு அதன் கீழ் கொழும்பு நகரின் அபிவிருத்தி துரிதகதியில் முன்னெடுத்துச் செல்லப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment