கொழும்பு - புறக்கோட்டை மூன்றாம் குறுக்குத் தெரு மற்றும் குமார வீதி ஆகியவற்றில் இயங்கி வந்த சட்டவிரோத நிதி நிறுவனங்கள் இரண்டை கொழும்பு ஊழல் ஒழிப்பு விசாரணை பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.
சுற்றிவளைக்கப்பட்ட இரு நிதி நிறுவனங்களில் இருந்தும் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
.
இச் சுற்றிவளைப்பின் போது மூன்றாம் குறுக்கு தெருவிலிருந்து 10 லட்சத்து 51000 ரூபாவும் குமார வீதியில் இருந்து ஒரு லட்சத்து 14000 ரூபாவும் ஊழல் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் உள்ள ஒருவருக்குச் சொந்தமான இப்பணம் கொழும்பில் சிலருக்கு சட்டவிரோதமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment