இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் வருடாந்த தேசிய மாநாடு (ஜலாஸா ஸாலனா) இன்று சனிக்கிழமை நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலில் நடைபெற்றது.
காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் கிளை ஜமாஅத்துக்களைச் சேர்ந்த பல நூற்றுக் கணக்கான ஆண்கள், பெண்கள் ,சிறுவர்கள் கலந்து கொண்டனர்.இவர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இதற்காக வருகை தந்திருந்தனர்.
இந் நிகழ்வில் தமிழ்,சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் விஷேட சமய சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்துடன்,கஸீதாக்கள்,உர்து நஸம் (உர்து பாடல்கள்) மற்றும் பரிசளிப்பு என்பன இடம் பெற்றது. இறுதியில் கூட்டு பிரார்த்தனையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.
No comments:
Post a Comment