மின்சார மற்றும் இலத்திரணியல் உபகரணங்களுக்கு உத்தரவாத சான்றிதழ் அவசியம்
சகல மின்சார மற்றும் இலத்திரணியல் உபகரணங்களுக்கும் உதிரிப்பாகங்களுக்கும் ஆறு மாத காலத்திற்கு குறையாத உத்தரவாத சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை உத்தரவிட்டுள்ளது. மின்சார மற்றும் இலத்திரணியல் உபகரணங்களையும் உதிரிப்பாகங்களையும் தயாரிப்போர், விற்பனை செய்வோர், இறக்குமதி செய்வோர் , விநியோகம் செய்வோர் ஆகியோருக்கு இது தொடர்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. இம் மாதம் 15 ஆம் திகதி முதல் இது அமுலுக்கு வருகிறது.
0 comments :
Post a Comment