Friday, October 28, 2011

லிபிய இடைக்கால அரசு மீது போர்க்குற்ற வழக்கு தொடரப்போகும் கடாபி குடும்பத்தினர்

போரில் கடாபி கொல்லப்பட்டது தொடர்பாக சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடர போவதாக கடாபி குடும்பத்தினர்அறிவித்துள்ளனர். கடாபி குடும்பத்தினர் சார்பில் அவர்களது வக்கீல் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பார்ஸ்டன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

லிபியாவில் புரட்சிப் படையினர் நாடு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். லிபிய அதிபர் கடாபி மற்றும் அவரது மகன் ஆகியோர் அவரது சொந்த ஊரான சிர்த் நகரில் கொல்லப்பட்டனர். கடாபி குடும்பத்தினர் பலர் தற்போது நாட்டை விட்டு தப்பி சென்று வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

லிபியாவில் புரட்சிப் படையினர் ஆரம்பத்தில் இருந்தே போர் குற்றங்களை புரிந்து வந்துள்ளனர். போர்க்குற்றறத்தை மீறி எராளமான ராணுவ வீரர்களையும் அப்பாவிகளையும் கொன்று குவித்துள்ளனர். கடாபி மற்றும் அவரது மகன் கொல்லப்பட்டதும் போர் குற்றங்களுக்கு எதிரானதாகும். எனவே இதுதொடர்பாக சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடர இருக்கிறோம்.

இடைக்கால அரசுக்கு லிபியாவை ஆளுவதற்கு எந்த உரிமையும் கிடையாது. அவர்கள் ஆட்சியை கடாபியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடாபி குடும்ப வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதற்கிடையே நகர பகுதிகளில் இருந்து தப்பி சென்ற கடாபி ஆதரவு ராணுவத்தினர் லிபியாவின் தெற்கு பாலைவன பகுதியில் பதுங்கி உள்ளனர். எனவே அவர்களை வேட்டையாட புரட்சிப்படையினர் அந்த பகுதியை நோக்கி சென்றுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com