அடிக்கடி குடிபோதையில் வந்து தனது மனைவி மற்றும் பிள்ளைகள் மூவரையும் தாக்கி துன்புறுத்தி வந்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரை (கணவன்) நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் 5 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் 2 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
நீர்கொழும்பு-மீரிகமை வீதியை சேர்ந்த நபர் ஒருவரே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவராவார். சந்தேக நபர் இதற்கு முன்னர் பல தடவைகள் குடிபோதையில் வந்து மனைவி மற்றும் பிள்ளைகளை துன்புறுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர் என்றும், மீண்டும் குடி போதைக்க அடிமையாகி வீட்டிலுள்ளவர்களை துன்புறுத்தமாட்டேன் என்று நீதிமன்றில் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் நீர்கொழும்பு பொலிசார் சந்தேக நபருக்கு எதிரான குற்றச்சாட்டில் குறிப்பிட்டுள்ளனர்
நீர்கொழும்பு சாஜஹான்
No comments:
Post a Comment