Friday, October 28, 2011

கொரிய மொழி பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்டன

அண்மையில் இடம்பெற்ற கொரிய மொழி பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைக்கு தோற்றியவர்கள் தமது பரீட்சைப் பெறுபேறுகளை www.slbfe.lk, www.eps top lk.org.kr, www.hrdkorea.org.kr மற்றும் www.eps.go.kr ஆகிய நான்கு இணையத்தளங்களூடாக அறிந்துகொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்கு50 ஆயிரத்து 636பேர் விண்ணப்பித்திருந்தனர்.இவர்களில் 44 ஆயிரத்து 214 பேர் தோற்றினர். இந்த பரீட்சையில் ஒன்பதாயிரத்து 300 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் 2012 ஆம் ஆண்டில் கொரிய தொழில் வாய்ப்புகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இம்முறை நடைபெற்ற கொரிய மொழிப் பரீட்சையின் போது பரீட்சை விதிமுறைகளை மீறி நடந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் சுமார் 60 பேர் பரீட்சை நிலையங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வெளியேற்றப்பட்டகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் மீண்டும் இந்தப் பரீட்சைக்கு தோற்றுவதற்கான வாய்ப்பினையும் இரண்டு வருட காலத்துக்கு இழந்துள்ளதாக மேற்படி முகவர் நிலையம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment