Thursday, October 20, 2011

கடாபி சுட்டுக்கொல்லப்பட்டார். என்னை சுடாதீர்கள் என்று கெஞ்சினாராம்.

லிபியாவில் கடாபிக்கு எதிராக நடைபெற்ற புரட்சியாளர்களின் போராட்டம் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கிய நேட்டோ படைகளின் தாக்குதல் காரணமாக கடாபி நாட்டை விட்டு தப்பி ஓடியதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் கடாபி லிபியாவில்தான் பதுங்கி இருந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடாபி ஆதரவு படையினர் வலுவாக இருந்த கடாபியின் சொந்த ஊரான ஷிர்தே பகுதிக்குள் புகுந்த புரட்சிபடையினர், பெரும்பாலான பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

நேற்றிரவு கடாபியின் பிறந்த இடமான சிர்ட்டியை பிடித்துவிட்டதாக புரட்சி படையினர் அறிவித்திருந்தனர்.

இருப்பினும் புரட்சி படையினரை எதிர்த்து கடாபி ஆதரவு படையினர் தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்த நிலையில், இன்று ஷிர்தே பகுதி முற்றிலும் புரட்சி படையிடம் வீழ்ந்தது.

கடாபி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மறைந்திருந்த மாளிகைக்குள் புகுந்த புரட்சி படையினர், கடாபியை துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாகவும், இதில்அவரது இரண்டு கால்களும் காயமடைந்ததாகவும் அந்நாட்டு தொலைக்காட்சி முதலில் செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால் இந்த தாக்குதலில் காயமடைந்த கடாபி சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. புரட்சிப் படையினர் அவரை சுற்றிவளைத்துச் சுட்டப்போது, 'என்னைச் சுடாதீர்கள்...!'என்று அவர் கெஞ்சியதாகவும், ஆனாலும் அதனை பொருட்படுத்தாது புரட்சிப் படையினர் அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடாபியுடன் அவரது ஆதரவு படையினர் 16 பேர் பிடிபட்டதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடாபி பதுங்கியிருந்த மாளிகைக்குள் இன்று காலை 8 மணிக்கு புரட்சி படையினர் புகுந்ததாகவும், சுமார் ஒன்றரை மணி நேரத்தில் சண்டை முடிவுக்கு வந்து கடாபி கொல்லப்பட்டதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கடாபி பிறந்த இடமான ஷிர்தே நகரில், நேட்டோ படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு நின்றுகொண்டிருந்த வாகனம் ஒன்றில், காயமடைந்த நிலையில் ஒருவர் மீட்கப்பட்டார். பின், அவர் அதிபர் கடாபி என்பதை நேசனல் டிரான்சிசனல் கவுன்சில் கமாண்டர் உறுதி செய்தார். இந்த தகவலை லிபியா லில் ஹரார் டிவி உறுதி செய்துள்ளது. கடாபியன் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடாபி இறந்துவிட்டார் என்று நேட்டோ படைகள் கூறிவருவது, அவரது ஆதரவாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வெற்றிக் கொண்டாட்டம் : கடாபி பிடிபட்டதையடுத்து, அவரது எதிர்ப்பாளர்கள், நாட்டின் பல இடங்களில் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடைசி வார்த்தை : கடாபி,, படையினரிடம் பிடிபடும் நிலையில், சுடாதீர்கள், சுடாதீர்கள் என்று கூறியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. அதனையும் மீறி அவர்கள் சுட்டதில், கடாபி பலியானதாக சர்வதேச படையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் இத்தகவலை எந்த தகவலும் இதுவரை உறுதிசெய்யப்படடவில்லை.

No comments:

Post a Comment