புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹண பெரேரா இன்று முதல் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளராகக் கடமையாற்றிய சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி மெக்சி புரொக்டர் பதவி உயர்வு பெற்று செல்வதால் பொலிஸ் பேச்சாளர் வெற்றிடத்துக்கு புதியவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, புதிய பொலிஸ் பேச்சாளராக தற்காலிகமாக நியமிக்கபட்டுள்ளஅஜித் ரோஹண பெரேரா நாளை பதவியேற்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது தற்காலிக நியமனம் என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி மெக்சி புரொக்டர் மன்னார் மாவட்ட பதில் பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment